அசாமில் மரியாதை நிமித்தமாக இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தார சோனோவால் அறிவித்துள்ள நிலையில், இதனால் அம்மாநிலம் பெறப்போகும் பயன்கள், இந்தியா-இஸ்ரேல் இடையோன நல்லுறவு எப்படி இருக்கிறது ஆகியவை குறித்து நம்மிடையே விளக்குகிறார் மூத்தப் பத்திரிகையாளர் சன்ஜிப் கிர் பருவா. பிரதமர் நரேந்திர மோடி தந்த ஊக்கத்தின்பேரில் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இஸ்ரேல் நாட்டுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள கவனம் செலுத்தினார். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அசாம் மாநிலத்துக்கு ஏராளமான இஸ்ரேலிய தூதர்கள் வருவதும் […]
