நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]
