புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகாம் தொடங்கும் தேதியை இன்னும் தமிழக […]
