தாய் யானையின் இரண்டு நாள் பாச போராட்டத்துக்கு பிறகு இறந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள செம்ம்பாலா பகுதியில் கடந்த 23-ஆம் தேதி காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. அப்போது திடீரென சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தாய் யானை உள்பட சில காட்டு யானைகள் இறந்த குட்டி யானையின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தது. […]
