ரேஷன் கடைகளை யானைகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில காட்டுப்பகுதிகளில் உள்ள யானைகள் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காக தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் வீடுகள் மற்றும் ரேஷன் கடை போன்ற பகுதிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் முடீஸ் பஜார் பகுதியில் 5 யானைகள் புகுந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதோடு அரிசியை தின்றுள்ளது. மேலும் காட்டுயானைகள் அங்கிருந்த வீடுகளையும் சேதப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் […]
