சோலார் பவர் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலை பெறுவதாகும். பகல் நேரங்களில் கிடைக்கும் சூரிய ஒளி மூலம் மின் ஆற்றலை மின்கலங்களில் சேமித்து அதனை இரவு நேரங்களில் பயன்படுத்தலாம். இதுவரை நாம் சோலார் கார், சோலார் வீடு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது சீனாவில் சோலார் ரோடு போட்டுள்ளார்கள். சீனாவில் இருக்கும் சென்டம் புரோவின்சில் இருந்து இந்த ரோடு ஆரம்பமாகிறது. இந்த ரோடு சுமார் 1 கி.மீ தூரத்தில் 5875 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. […]
