மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் புதிய திருமணம் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு ஏ.சி பொருத்தம் பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சாருக் மொய்தீன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாமல் சாருக் மொய்தீன் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]
