திண்டுக்கல் அருகே திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை அடுத்த பூண்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு அவரது வீட்டார் வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். இந்நிலையில் தோட்ட வேலைக்காக, அதிகாலையே எழுந்து சென்ற லட்சுமணன் இறந்த செய்தி அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகனின் உடலை கண்டு […]
