குறிச்சி கல்லுக்குழி பகுதியில் மின் பொறியாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி மின் பொறியாளர் சக்திவேல் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூர் காவல்துறையினர், நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை எரித்துக் கொலை […]
