ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நர்சிங் கல்லூரியில் ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி-யில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து அங்கு தீ மளமளவென எரிய ஆரம்பித்தால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தீயானது அந்த ஆய்வகத்தின் உள்ளே தர்மாகோல் மூலம் அமைக்கப்பட்டிருந்த கூரையில் வேகமாக பரவி […]
