மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள் […]
