மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால் வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 11 முதல் 18 ஆம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று […]
