நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கை […]
