வாக்குச் சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 103 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மாற்று திறனாளிகள் வந்து ஓட்டு போடுவதற்கான சாய்வு தளம், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனை அடுத்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு, […]
