சத்துணவு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவு மையம் மூலம் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்களுக்கு வழங்கிய சில மூட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் […]
