இவ்வுலகில் அனைவர்க்கும் மனஅழுத்தம் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. அதனால் நம் மனம் மட்டும் பாதிக்கவில்லை, உடலும் தான். மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் சில விளைவுகள்: கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது. தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். […]
