2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்க்காடு வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர் செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல , முயற்சி நின்றாலும் மரணம் தான் என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின் செய்தியாகளை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]
