நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் ஆண்டுதோறும் உயர்ந்ததால், இந்த ஆண்டு அத்தேர்விற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு […]
