ஈரோடு கோபிச்செட்டி பாளையத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை என கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும் என அவர் தகவல் அளித்துள்ளார். வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு […]
