தமிழகத்தில் கொரோனா தொற்று பரவிய காலம் தொடங்கி மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருக்கும் சாதக பாதக அம்சங்களை திமுக சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. தற்போதும் அரசின் நடவடிக்கையை விமர்சித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா நோய் தொற்றை எப்படி கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தான் கிடைக்கும். கொரோனா பேரிடரை காட்டி ஏமாற்றியது போதும்; பொருளாதாரத்தை சீரழித்தது போதும். வருமானத்தை இழந்து, வேலையை இழந்து, தொழிலை […]
