தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்து பதிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல முதல்வரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து […]
