தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுடன் நாற்றுநட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி சித்தமல்லி பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணியை பார்த்ததும் […]
