ஹரியானாவில் ஓராண்டு கூட நிறைவடையாத ஜனநாயக் ஜனதா கட்சி கிங் மேக்கராக உருவெடுக்கும் சூழல் நிலவுகிறது. 90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும் கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து […]
