விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியாகியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு திலீப் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் விநாயகரை எடுத்துச் செல்லும் வாகனத்தில் திலீப் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் […]
