விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர். […]
