பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே போதிய கட்டட வசதியின்றி பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அருகில் உள்ள சத்துணவு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அந்த அறையை சுத்தம் செய்யச்சென்ற ஊராட்சி ஊழியர் மதுபோதையில் அங்கிருந்த ஆவணங்களை எடுத்து அறையின் அருகிலேயே […]
