திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]
