6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் அயர்லாந்து நாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்களை சோதனை செய்துள்ளனர். மேலும் சென்னை மற்றும் நாமக்கல் முகவரிகளுக்கு வந்த 2 பரிசல்களில் சூப் பரிசுப்பெட்டி என எழுதி இருந்தது. […]
