குளிக்க சென்ற முதியவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாபட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் காலனியில் அய்யனார் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். அவர் வெளியே வர முயற்சி செய்தும் முடியாததால் தண்ணீரில் மூழ்கி முதியவர் பலியாகி […]
