குளத்திற்கு குளிக்க சென்றபோது தொழிலாளி திடீரென நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்தவர் கண்ணன்-லட்சுமி தம்பதியினர். கண்ணன் கொட்டகை போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி மாலை கணவன் மனைவி இருவரும் குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். லட்சுமி குளக்கரையில் அமர்ந்திருக்க கண்ணன் குளத்தில் இறங்கி நீச்சலடித்து குளத்தின் மறு கரைக்கு சென்று விட்டு மறுபடியும் மனைவி அமர்ந்திருந்த கரைக்கு திரும்பியுள்ளார். […]
