தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இரண்டு சிறுமிகளும் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுமிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
