குளத்திற்கு நண்பர்களுடன் குளித்த சென்றபோது மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார், புஷ்பராஜ், சதீஸ். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ராம்குமாரும் சதீஷும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அருகில் உள்ளவர்களிடம் தகவல் அளித்துள்ளனர். […]
