கடும் வறட்சியால் 55 யானைகள் உயிரிழந்ததையடுத்து ஜிம்பாப்வே அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட யானைகளை விற்பனை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு 55 யானைகள் பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் […]
