தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து […]
