அரசு பேருந்து ஓட்டுநர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் பேருந்து ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் முருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சுத்தமலை பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் செடியின் நெடுக்கில் முருகனின் […]
