கூடலூரில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தியாகராஜா.. 52 வயதுடைய இவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலுரை நோக்கி லாரியை ஓட்டி வந்துகொண்டிருந்த போது, ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ […]
