லாலாபேட்டை அருகே மது அருந்தும் போட்டி நடத்த முயற்சிசெய்த இளைஞர்களைத் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் புணவாசிபட்டியைச் சேர்ந்த அசுரன் பாய்ஸ் என்ற இளைஞர் குழு மது அருந்தும் போட்டி இன்று நடத்த திட்டமிட்டிருந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகள் பரப்பப்பட்டுவந்தன. மேலும் இந்த மது அருந்தும் போட்டிக்கு வரும் இளைஞர்கள் நுழைவுக் கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூ.15001, […]
