மதுபோதையில் சிலர் நாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் கூனி பஜார் பகுதியில் 5 வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுபோதையில் தெரு நாயை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அந்த நாயை ஒரு ஆட்டோவில் கட்டி சாலையில் இழுத்து சென்றனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிளூ கிராஸ் அமைப்பின் துணைத் தலைவர் ராகவன் காவல்நிலையத்தில் […]
