கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் அதே வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் சீனாவுடனான போக்குவரத்து […]
