மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை ஒரு நோயாளியின் உறவினர் காலணியால் தாக்கியதால் சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பயிற்சி மருத்துவரான மாலதி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.இதனை மருத்துவர் மாலதி கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் மருத்துவர் […]
