அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பிராட்வேவில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, […]
