Categories
அரசியல் சற்றுமுன்

இந்துக்களுக்காக அவதாரம் எடுத்தவர்கள் எங்கே ? முக.ஸ்டாலின் கேள்வி …!!

இந்துக்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று சொல்பவர்கள் எங்கே சென்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை  சட்டத்திற்க்கெதிரான போராட்டம் என்பது முஸ்லீம் மக்களுக்கானது அல்ல. இந்தியர்களை கக்கூடிய  போர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை போராட்டம் : இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் – முக.ஸ்டாலின் கருத்து …!!

குடியுரிமை சட்ட போராட்டம் என்பது இந்தியர்களை பாதுகாக்கக்கூடிய போர் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் , இது முஸ்லீம் மக்களுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 1 முறைகேடு ? -சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு …!!

குரூப் 1 தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குரூப்-1 தேர்வில் முறைகேடு புகாரை மத்திய குற்றவியல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி சேனனி உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், அந்த பயிற்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி …!!

க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த க.அன்பழகன் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவினர் கவலையடைந்துள்ளனர். இவருக்கு 97 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு ஒரு ஆளு கிடையாது….. நாங்க வட்டி செலுத்தி வருகின்றோம் – முதல்வர் பழனிச்சாமி

திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கு நாங்கள் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று முதல்வர் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய திமுகவின் RS பாரதி ஊடகங்கத்தையும்  மிக அவதூறாக விமர்சனம் செய்தார்.   அதை ஊடகம் கண்டுகொள்ளவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.திமுக […]

Categories
மாநில செய்திகள்

2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியே தொடரும்… ஸ்டாலின் ஆசை நிறைவேறாது – முதல்வர் பழனிசாமி பேட்டி!

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர் என்றும் பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரவிலும் பெண்கள் வெளியில் சென்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது ஒரு மிஸ்டு கால் கட்சி…. ”மிஸ்டு கால் தலைவரை தேடுது”…. தெறிக்கவிட்ட வீரமணி …!!

பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என்பதால் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கான மிஸ்டு கால் தலைவரை தேடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி  விமர்சித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்த போது , மோடியை விமர்சித்தால் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பா.ஜ.கவின் முரளிதர ராவ் கூறியுள்ளது, தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள என்று குற்றம் சாட்டினார். மேலும் பாஜகவை கடுமையாக சாடிய அவர் ,தமிழ்நாட்டில் தலைவரை நியமனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இம்ரான்கானின் கைக்கூலி ஸ்டாலின்” வெளுத்து வாங்கிய பாஜக ….!!

பாகிஸ்தான் பிரதமரின் கைப்பாவையாக முக.ஸ்டாலின் செயற்படுகின்றார் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். […]

Categories
அரசியல்

அரசியல் வேண்டாம்….. வனவாசம் போறேன்…. ஸ்டாலினுக்கு சவால் …!!

CAAவால் இஸ்லாமியர் பாதிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் நிரூபித்தால் நான் வனவாசம் செல்ல தயார் என்று பாஜகவின் முரளிதர ராவ் சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

JUST NOW : திமுக பிரமுகர் வெட்டி கொலை

சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் மற்றும்  விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் குப்பனை கொலைசெய்தது. கொலை செய்த 4 பேரில் ஒருவனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

தாய்மொழி தின வாழ்த்துக்கள் சொல்லும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். உலகில் வாழும்  அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்க 21ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1999-ம் ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி நாள் என்று யுனெஸ்கோ அறிவித்தது. உலக அமைதியை நிலைநாட்டவும் , பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளையும் பாதுகாக்க உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்டர் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மதிய உணவுத்திட்டம்…… காங்கிரஸ்…. திமுக…. அதிமுக….. அப்ப கூட அப்படி இல்ல…. கனிமொழி வேதனை….!!

சென்னை  லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக செயல்படும் – OPS , EPS கூட்டறிக்கை ..!!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கை அரணாக அதிமுக அரசு விளங்கும் என்று OPS , EPS கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சிறுபான்மை மக்களுடைய பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கும் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக அறிக்கை மூலமாக தெளிவு படுத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை பல்வேறு நன்மைகளை செய்து அதிமுக அரசு விளங்குவதாகவும் , தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி …!!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் , கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் அதிகமாக உணர்ச்சிவசப்படடுவார். அவருக்கு இருதய தொந்தரவு இருப்பதால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவார் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]

Categories
Uncategorized

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதியை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை!

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டை போராட்டம் – திமுக வெளிநடப்பு

திமுக இன்றைய சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , சட்டசபை கூட்டத் தொடரில் தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே சபாநாயகர் சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் , விவாதிக்க வேண்டுமென்று மனு கொடுத்தோம். வண்ணாரப்பேட்டையில் மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீஸ் மீது கல் எறிந்தனர்…. பாட்டில் வீசினர் ….. முதல்வர் விளக்கம் ….!!

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு நேரம் இல்லா நேரத்தில் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி , ஐயூஎம்எல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  இந்த […]

Categories
மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக திமுக ஏன் அறிவிக்கவில்லை? அமைச்சர் தங்கமணி கேள்வி!

திமுக ஆட்சியில் இருந்தபோது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக ஏன் அறிவிக்கவில்லை என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நான்கு நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் இன்றைய விவாதத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடை, பியூட்டி பார்லர்…இப்போ பெட்ரோல் பங்க்…!

கீழ்வேளூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், கோகுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகி, அவரது கணவரும் திமுக துணை ஒன்றிய செயலருமான நாகராஜன் ஆகியோர் தங்களது காரில் டீசல் போட வந்துள்ளனர். அப்போது, 300 […]

Categories
மாநில செய்திகள்

தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடரவிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தகவல்களை தெரிவித்ததாகக் கூறி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில், இந்தியாவையே உலுக்கிய வியாபம் ஊழலுக்கு அடுத்து டிஎன்பிஎஸ்சி ஊழல் தமிழ்நாட்டை உலுக்கியிருப்பதாகவும், தமிழ்நாடு பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறையைச் சார்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இந்த முறைகேடுகளில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உங்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் யார்? – ஸ்டாலின்

உங்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் யார்? என்பதை அறிந்து அதற்கு பயன்படக்கூடிய வகையில் மக்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ கீதாஜீவன் – ஜீவன் தம்பதியினரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறைகேடு….. ஆட்டம் காணும் அப்பாவு….. திணறும் திமுக….. விசாரணையில் பகீர்

TNPSC தேர்வு முறைகேட்டு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் முக்கியப் பணிகளில் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெறிக்க விடும் அதிமுக….. ”காழ்ப்புணர்ச்சி வழக்கு”…. கதறும் செந்தில் பாலாஜி …!!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்பட்ட ஒன்று தான் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு ஆஜரான போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ஆவது பட்ஜெட் ”பத்தாத பட்ஜெட்” முக.ஸ்டாலின் விமர்சனம் …!!

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டம் ஏதும் இல்லை என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக  அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. கடன் சுமையை பொருத்தவரைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினிக்கு என்சிஆர் என்றால் என்னவென்றே தெரியாது’ – தமிழன் பிரசன்னா கடும் தாக்கு

 என்சிஆர் என்றால் ரஜினிக்கு என்னவென்றே தெரியாது என திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடுமையாக விமர்சித்துள்ளார். நாகை மாவட்டம் பொறையாரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் பங்கேற்று உறையாற்றினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழன் பிரசன்னா கூறுகையில், “மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – இன்று விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தூதரகம் மூலம் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி..!

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் “டைமண்ட் பிரின்சஸ்” என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அதில் 162 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகள், பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபயண போராட்டம் – திமுகவினர்

சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திமுக கட்சியினர் தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை நடை பயணமாக சென்று போராட்டம் நடத்தியுள்ளனர் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாகவும் கூறி சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தக்கலையில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் திமுக கட்சியினரால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முக்கியப்புள்ளிக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்..!!

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக தான் தெரிவித்தபோதும், அவர் அமைதியாக இருப்பது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மந்தைவெளியில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர். இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை மறுநாள் விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கூட்ட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு …!!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.திமுக , மதிமுக , கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு , அமர்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

சமஸ்கிருதம் செத்த மொழி – நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்..!!

சமஸ்கிருதம் செத்த மொழி என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, மத்திய சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பாஜக அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தார். திருக்குறளை அடிக்கடி குறிப்பிட்டு பேசும் மத்திய அரசு, உலகின் மிக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரஜினிக்கு ஒரு சட்டம்…. விஜய்க்கு ஒரு சட்டமா…? என்ன நியாயம்….? கொந்தளித்த தயாநிதி…. மக்களவையில் சரமாரி கேள்வி…!!

நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெற்ற  மக்களவை கூட்டத்தில் திமுக MP தயாநிதி மாறன் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வரிச்சலுகை மத்திய அரசு அளித்திருப்பது  அற்புதமான ஒன்று. நீங்கள் பட்ஜெட்டில் அளித்த சலுகை நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் அதே தமிழகத்தில் தான் நடிகர் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் நடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீணாக ஓடிய நீர்….. நடுரோட்டில் வேஷ்டி…. சட்டையை கழட்டி…. திமுக செயலாளர் ஆனந்த குளியல்….!!

திருப்பூர் அருகே வீணாகும் தண்ணீரை சரிசெய்ய கோரி நடுரோட்டில் வேஷ்டி சட்டையை கழட்டி முன்னாள் திமுக செயலாளர் குளியல் போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையை காட்டிலும் அதிகமான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படும் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வீணாக […]

Categories
மாநில செய்திகள்

வரும் 17 ஆம் தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்..!!

வருகின்ற 17 ஆம் தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கழக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் வருகின்ற வருகின்ற 17-02-2020 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். இதில் மாவட்டக் கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கையெழுத்து இயக்கம்… மணமேடையில் கையெழுத்திட்ட புதுமண தம்பதி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் மனமேடையிலையே கையெழுத்திட்டுள்ளனர் புதுமண தம்பதியினர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவரணியின் அமைப்பாளர் சபீர் அன்சில் மற்றும் சஜிதா பர்வீன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமேடையில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஸ்டாலின் உறுதி

 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”நாம் எவ்வளவு சரியான பாதையில், முறையாகவும் எச்சரிக்கையாகவும் அளந்து அடியெடுத்து வைத்துச் செல்கிறோம் என்பதை, அரசியல் எதிரிகளின் அலறலில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

”ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்” அமைச்சர் எச்சரிக்கை …!!

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் என் மீது குற்றச்சாட்டு கூறினால் வழக்குத் தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் செனாய் நகர் அம்மா அரங்கில் நடந்தது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ தமிழ்நாட்டில் மட்டுமே 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூங்கி எழுந்து, […]

Categories
மாநில செய்திகள்

மலையளவு ஊழல்…. “குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு”… ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின்  இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழுமுதல் உதாரணமான குரூப் 1 முறைகேட்டை மறைக்க ஆலாய் பறக்கும் தமிழக அரசு, ஆளும் கட்சி சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களை காப்பாற்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்- உயர்நீதிமன்றம்..!!

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக  கூறி  16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. இது […]

Categories
மாநில செய்திகள்

“முறைகேடுகளை மூடி மறைத்து”… குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“முறைகேடுகளை மூடி மறைத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக  ஆயுதப்படை காவலர் சித்தாண்டி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து கைது நடவடிக்கையால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதை தொடர்ந்து  தற்போது 2016- ஆம் ஆண்டு நடந்த VAO தேர்வு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி – திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது!

2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் கோயில் கலசத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், […]

Categories
மாநில செய்திகள்

விரக்தியின் காரணமாகவே ஆளுநரிடம் திமுக மனு – அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்..!

ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது” என்றார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CAA -வை எதிர்த்து மணமக்களிடம் கையெழுத்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரஜினிக்கு அரசியல் புரியவில்லை – உதயநிதி ஸ்டாலின்.!

ரஜினிகாந்த் நடிகர் என்பதால் அரசியல் சரியாக புரியாமல் பேசி வருகிறார் என திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை லயோலா கல்லூரி வாயிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெற்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மணமக்களிடம் கையெழுத்து பெற்ற மு.க. ஸ்டாலின்!

திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி […]

Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டிய ராசா…. ”பின்வாங்கிய அரசு”…. சில நொடிகளில் உத்தரவு …!!

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் என்று மக்களவையில் ஆ. ராசா தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா இன்று மக்களவையில் தமிழ்நாடு அரசு அறிவித்து பின் ரத்து செய்த 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பேசினார். அப்போது, “தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இல்லாமல் இடையில் 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்தத் தேர்வானது விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: பொதுமக்களுடன் நேரில் சந்திப்பு..!!

திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர். இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8ஆம் தேதி வரை தொடரும் என்றும், […]

Categories

Tech |