வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார். […]
