அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தியதில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர் லாவண்யா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொது மக்களிடமும் அலுவலர்களிடமும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் […]
