தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]
