ஏழ்மையால் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி ஆசிரியை செய்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எளம்பலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் கணித பட்டதாரி ஆசிரியரான பைரவி என்பவர், அப்பகுதியில் கொரோனா பாதிப்பால் பலரது குடும்பங்கள் ஏழ்மையில் தவித்து வருவதையும், ஏழ்மையின் காரணமாக அவர்களால் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான மொபைல் போனை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்து, ஏழ்மை கல்வி கற்பதற்கு […]
