மகள் விஷம் குடித்ததால் தாய் மற்ற குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரியா, திரிஷா என்ற 2 மகள்களும், விஷ்ணு என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரியா அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி […]
