சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து தரக்கோரி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் அருகில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அதன் அருகில் பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்னர். […]
