சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]
