ஜூன் 12 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது . நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு ஜெயலலிதாவைப் போல் ஆளுமைத் திறன் […]
